(கம்பத்தில் அரிகொம்பன் யானை ஸ்லோவாக நடக்கும் காட்சிகள் ஒய்யாரமாக அரிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் உள்ள தெருக்களில் நடந்துவர, மக்கள் எல்லாம் பீதியில் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார்கள். ஹாயாக நடந்து செல்லும் அரிக்கொம்பன் அவ்வப்போது ஒவ்வொரு வீட்டிக்குள்ளும் விசிட் அடிக்கிறது.எங்கெல்லாம் அரிசி மனக்கிறதோ அங்கெல்லாம் துதிக்கையை நீட்டுகிறது.. அகப்பட்டால் அரிசி... இல்லையெனில் ஏமாற்றம் என செல்லும் அரிக்கொம்மன் ஒரு அரிசி பிரியன்... அரி என்றால் மலையாளத்தில் அரிசி... அரிசிக்காக அது நடத்தும் வேட்டைக்காகவே அரிக்கொம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. அரிசியை தேடினாலும் அமைதியாகத்தானப்பா செல்கிறது என சொல்லலாம்... அதன் ஹிஸ்டரியை கேட்டால்தான் அவன் டெடர்பாய் என்பது தெரியவரும்... அந்த அளவிற்கு அரிகொம்பனை பார்த்தாலே மக்கள் நடுக்குவார்கள்...
மனிதர்களை கண்டு துளியும் பயமில்லாது அசால்டாக நடக்கும் அரிக்கொம்பம் தனக்கு வேண்டியது கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அரிசிக்காக அரிக்கொம்பன் உடைத்த வீடுகள், கடைகள் பல... கேரள மாநில வனத்துறை செக்போஸ்ட்டை எல்லாம் துவம்சம் செய்திருக்கிறது. இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் அரிக்கொம்பன் பெயரை கேட்டாலே மக்கள் அலறுகிறார்கள்.
பொருட் சேதங்களை பொறுத்துக் கொள்ளலாம் என்றாலும், கேரளாவில் அரிக்கொம்பனால் ஏற்பட்ட உயிரிழப்புகள்தான் கவலையளிக்கிறது. ஆம், அரிக்கொம்பனால் 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் கேரளாவில்.... அரிக்கொம்பன் அட்டகாசம் தொடர கடந்த மாதம் இறுதியில் கேரள வனத்துறை, காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து தமிழக-கேரள எல்லையாக திகழும் பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட தேக்கடி மேதகானம் வனப்பகுதியில் விட்டனர். யானையை பிடிக்கப்பட்ட பாட்டை வார்த்தையால் விவரிக்க முடியாது என்ற அளவிற்கே இருந்தது.. மயக்க ஊசிகளுக்கு எல்லாம் மயங்காத அரிக்கொம்பன் இறுதியில் கும்கிகள் உதவியுடன் பிடிக்கப்பட்டது.