தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தில் அரிக்கொம்பன் நடமாட்டம் உள்ளததால் விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். விளைநிலங்களுக்கு வரும் விவசாயிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் அரிக்கொம்பன் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சுருளி அருவி செல்ல சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.