திமுகவில் உள்ள 23 அணிக்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுகவில் உள்ள 23 அணிக்களுக்கும் துணை பொதுச்செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவில் நிர்வாக ரீதியாக உள்ள 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களாக துணை பொது செயலாளர்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விவசாய அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியும், மாணவரணி, இளைஞர் அணி, சட்டத்துறை அணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, மகளிர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை உள்ளிட்ட 5 அணிகளுக்கு திமுக துணை பொது செயலாளர் கனிமொழியும், திமுக பொறியாளர் அணி, வர்த்தக அணி உள்ளிட்ட 4 அணிகளுக்கு துணை பொதுச்செயலாளர் பொன்முடியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 4 அணிகளுக்கு துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.