இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பீதியில் உறைந்த மக்கள்
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 4.40 மணி அளவில் சிபருட் தீவு அருகே கடலுக்கு அடியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோளில் 6 புள்ளி 3 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில், 60 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.54 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6 புள்ளி1ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.