பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
வரும் 2023 ஜனவரி 10 ம் தேதிக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த வேட்டி சேலைகளின் டிசைன்கள் 10 வருடங்களுக்கு பிறகு மாற்றப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன் வெறும் 4 வண்ணங்களில் மட்டுமே சேலைகள் வழங்கப்பட்ட நிலையில், 15 புதிய டிசைன்களில் பல வண்ணங்கள் தற்போது வழங்கப்படவுள்ளது.
மேலும், முன்பாக துணியின் ஆயுட்காலம் வெறும் 6 மாதம் இருந்த நிலையில், தற்போது நூலின் தரத்தால் 5 ஆண்டுகள் வரை நீடிக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.