திருவண்ணாமலையில், மலை மீது பற்றி எரிந்த காட்டுத்தீயை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அணைத்தனர். திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 உயரமுள்ள அண்ணாமலையார் மலை அமைந்துள்ளது. இந்த மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள், நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், மலையில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.