கர்நாடக தேர்தல் தொடர்பான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, ஜெகதீஷ் ஷெட்டர் இணைந்ததால் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் நினைத்தால், அவர்களால் தனித்து வெற்றிப்பெற முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றார். ஷெட்டர்தான் காங்கிரசுக்கு சென்றிருக்கிறாரே தவிர, கட்சிக்காரர்கள் அல்ல எனக் குறிப்பிட்ட அமித்ஷா, மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு திரும்பும் என்றார். சில தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்காதது குறித்து பேசிய அமித்ஷா, இதற்கு பல காரணம் இருப்பதாகவும் கட்சிக்கு இளம் தலைமுறையை கொண்டுவர வேண்டும் என்பது முக்கியம் என்றார். இதற்கிடையே பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசிய போது, மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்றால் மீண்டும் பொம்மையே முதல்வர் ஆவார் என்றார். நிகழ்ச்சியில் திமுகவை விமர்சித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிராந்திய கட்சிகள் எல்லாம் குடும்ப கட்சிகளாகிவிட்டன என கூறினார்.