அங்கன்வாடி மையத்தை சுத்துப்போட்ட யானை - சத்தமின்றி பதுங்கிய சிறுவர்கள்..
கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே அங்கன்வாடி மையத்தை, காட்டு யானை ஒன்று முற்றுகையிட்டது. இதனால் அச்சமடைந்த சிறுவர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கதவை மூடிக்கொண்டு சத்தமின்றி அமைதியாக உள்ளே இருந்தனர்.
யானை நடமாடியதை கண்ட மக்கள், யானையை காட்டிற்குள் திருப்பியனுப்ப கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஒருமணி நேரத்திற்கு பின் யானை திரும்பிச் சென்ற நிலையில், அங்கன்வாடி மையத்தில் இருந்த சிறுவர்களும் ஊழியரும் பத்திரமாக வெளியே வந்தனர்.
இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது.