திடீரென குதறிய தெரு நாய்கள்... துடிதுடித்து உயிரை விட்ட 11 வயது சிறுவன்

Update: 2023-06-13 01:48 GMT

கேரள மாநிலம், கண்ணூரில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் குறித்து குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரில் மாற்றுத்திறனாளி சிறுவனான முழபிலங்காட்டை பகுதியை சேர்ந்த 11 வயதான சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறியது. இதில் உயிரிழந்த சிறுவனின் உடல் தற்போது தலச்சேரி பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டது. பின்னர் சிறுவனின் உடல், வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. நிஹாலை கடைசியாகப் பார்ப்பதற்காக காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலை மோதியது. நிஹாலை அறிந்தவர்களும் அறியாதவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

சிறுவனின் இறப்பு குறித்து வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், நிஹாலின் உடல் முழுவதும் கடி மற்றும் கீறல் காயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்து, குழந்தை உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் மூலம், ஏபிசி திட்டத்தை செயல்படுத்துவதில் ஏதேனும் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கப்படும் என, குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் கே.வி.மனோஜ் குமார் கூறியுள்ளார். குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்