ஒடிசாவில் மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், நோயாளியுடன் மதுபானம் அருந்தும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் பகுதியிலிருந்து கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், பைபாசில் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு மதுபானம் அருந்தியுள்ளார். அப்போது கால் உடைந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி நகுலே தெகுரிக்கும் ஒரு பெக்கை ஊற்றிக் கொடுத்துள்ளார். நகுலேவும் ஆம்புலன்சில் படுத்து கிடந்தவாறு மதுவை அருந்தும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இருவரும் பைபாஸ் ஓரத்தில் ஹாயாக மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் இணையவாசிகள் மத்தியில் இதுதான் பெக் டிரீட்மெண்டா என கலாய்த்தும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்