இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா சர்ச்சைக்குரிய முறையில் பேசியதை தொடர்ந்து அவரது பதவி பறிபோனது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் பி.சி.சி.ஐ. இறங்கியது.
இந்நிலையில், தேர்வு குழு தலைவராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை தேர்வு செய்து பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் வழங்கப்படும்.
அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 288 விக்கெட்டும், 26 டெஸ்ட் போட்டிகளில் 58 விக்கெட்டும், 4 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார்.
50 ஓவர் உலகக்கோப்பை போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அகார்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.