சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டால் 20 லட்சம் பேர் மரணிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலம் தொடங்கி கட்டுப்பாட்டை தொடரும் சீனாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு வலுவாக்கி வரும் நிலையில், அதற்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடருகிறது.
இதற்கிடையே சீனாவின் தென்மேற்கு குவாங்சி மாகாணத்தின் நோய் கட்டுப்பாட்டு மைய தலைவர் ஜோகு டியாடோங் பேசுகையில், சீனாவில் ஊரடங்கை தளர்த்தினால் 20 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரிட்டன் ஆய்வாளர்களும், சீன தடுப்பூசிகள் வீரியம் இல்லாத நிலையில், பூஸ்டர் டோஸ்களை செலுத்துவதை அதிகரிக்காமல் ஊரடங்கை தளர்த்தினால் 21 லட்சம் பேர் மரணிப்பார்கள் என அச்சம் தெரிவித்துள்ளனர்.