சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த 4 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே 24ஆம் தேதி துபாயில் இருந்து வந்த வருவருக்கும் ஹாங்காங்கில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 4 நாட்களில் 6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எந்த வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளத் என்பதை அறிய, மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 3 நாட்களில் முடிவு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.