உடல் பருமனை குறைக்க மருந்து சாப்பிட்டதும் வேகமாக குறைந்த எடை - அதே வேகத்தில் பறிபோன இளைஞர் உயிர்..!

Update: 2023-01-04 07:22 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர், உடல் நல குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா. 20 வயது இளைஞரான இவர் மிகவும் பருமனாக இருந்ததால், உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். தொடர்ந்து அவர், அந்த நிறுவனம் வழங்கிய மருந்துகளை வாங்கி, 10 நாட்களாக சாப்பிட்டு வந்ததாகவும், இதில் அவரது உடல் எடை வேகமாக குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சூர்யாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, கடந்த ஒன்றாம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்