கூகுள் ஓனரின் மனைவியுடன் தகாத உறவு? எலான் மஸ்க் பரபரப்பு விளக்கம்
அமெரிக்காவின் செய்தி நிறுவனம் ஒன்றை கடுமையாக விமர்சித்துள்ள எலான் மஸ்க், தனக்கும் கூகுள் நிறுவனரின் மனைவிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, கூகுள் நிறுவனர் சேர்ஜி பிரின்னின் மனைவியுடன் நிகோல் ஷனாஹனுடன் எலான் மஸ்க் கள்ள தொடர்பில் இருந்ததாகவும், இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை முறிவுக்கு வந்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை முற்றிலும் மறுத்துள்ள எலான் மஸ்க், தான் நிகோலை கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே சந்தித்ததாகவும், அப்போது பலரும் உடன் இருந்ததாகவும் விளக்கமளித்துள்ளார். இதோடு சேர்ஜியுடனான தனது நட்பு தற்போது நீடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.