ஹின்டன்பர்க் அறிக்கைக்கு எதிரான சட்ட போராட்டத்திற்காக, அமெரிக்காவை சேர்ந்த சட்ட நிறுவனமான வாச்டெல்லை அதானி குழுமம் நியமித்துள்ளது. ஹின்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிய ஆரம்பித்தன.
இந்நிலையில், ஹின்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக வழக்கில், சட்ட போராட்டத்தில் ஈடுபட வாட்ச்டெல், லிப்டன், ரோசன் அன்ட் காட்ஸ் நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர்களை அதானி குழுமம் நியமித்துள்ளது.
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட இந்த சட்ட நிறுவனம், சமீபத்தில் எலான் மஸ்க்-க்கு எதிராக டுவிட்டர் தரப்பில் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.