அதானி பங்குகளில் மறைமுகமாக முதலீடு செய்யப்படும் தொழிலாளர்களின் PF பணம் - பரபரப்பு தகவல்

Update: 2023-03-29 08:14 GMT
  • பணியார்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதானி குழும பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
  • நாடு முழுவதும் 27 கோடியே 73 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கும் வருங்கால வைப்பு நிதியில், தற்போது 16 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
  • இவற்றில் 15 சதவீத தொகை, பங்கு சந்தையில் வர்தகம் செய்யப்படும் நிதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
  • இத்தகைய நிதிகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகளில் அடங்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன.
  • அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி என்டெர் பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த குறியீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், இவற்றிலும் முதலீடு செய்கின்றன.
  • இதன் மூலம் EPFO எனப்படும் வருங்கால வைப்பு நிதி அமைப்பும், அதானி நிறுவனங்களில் மறைமுகமாக முதலீடு செய்துள்ளது
  • . பங்கு சந்தைகளில், 2022 வரை 1 புள்ளி 57 லட்சம் கோடி ரூபாயை EPFO முதலீடு செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்