'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் டம்மி ஆயுதங்களால் எழுந்த புதிய பிரச்சனை | Surya

Update: 2022-11-20 06:25 GMT

திரைப்பட படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பிற்கு கொண்டுசெல்லப்பட்ட டம்மி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்பின், தென் இந்திய திரைப்பட டம்மி எஃபக்ட்ஸ் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டம்மி ஆயுதங்களை ஆய்வு நடத்தி, அதன்பிறகு சான்றிதழ் வழங்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்