நடிகர் தனுஷை தனது மகன் என வழக்கு தொடர்ந்த கதிரேசன் - மரபணுவை பாதுகாக்க கோரிக்கை

Update: 2023-04-11 12:29 GMT
  • நடிகர் தனுஷை தனது மகன் எனக்கூறி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் (70) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
  • கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை (டி.என்.ஏ) சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனக்கூறி அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளித்தார்.
  • பின்னர் வழக்கறிஞர் டைட்டஸ் அளித்த பேட்டியில்,
  • "நடிகர் தனுஷின் அப்பா கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளது.
  • இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
  • கதிரேசன் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் என்பதால், அவரது டி.என்.ஏ. வை எடுத்து பராமரிக்க வேண்டும் என மனு அளித்து உள்ளோம்.
  • ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்து இருந்தார். பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார்.
  • எனவே, தனுஷின் பெற்றோர் கதிரேசன் - மீனாட்சி ஆகியோர் தான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கின்றது. எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்வோம் என்று சொன்ன தனுஷ் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார்.
  • இது ஒரு கதிரேசனின் பிரச்சனை அல்ல. இப்படி எத்தனையோ பெற்றோர் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்" என தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்