பள்ளி சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட விவகாரம்... ஃபிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

Update: 2022-12-15 16:23 GMT

டெல்லியில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய விவகாரத்தில், ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட்டில் ஆசிட் ஆர்டர் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. ஆசிட் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும்,ஆசிட் எளிதில் கிடைப்பது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன் படி, ஆசிட் விற்பனை செய்பவர்களுக்கும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்