அடிக்கடி செல்போன் பேசிய மனைவிசந்தேகத்தால் நடந்த விபரீதம்...சென்னையில் அதிர்ச்சி
மனைவியின் நடத்தையில் சந்தேக ம் கொண்ட கணவன், மனைவியை பெல்ட்டால் கழுத்தை நெறித்து கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனஞ்செழியன். பெயிண்டராக வேலை பார்த்துவரும் இவருக்கு அம்பிகா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவத்தன்று தம்பதியின் வீடு நீண்ட நேரம் பூட்டப்பட்டிருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில், கதவை உடைத்து அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்றபோது, அம்பிகா பெல்ட்டால் கழுத்து நெறிக்கப்பட்டும், தனஞ்செழியன் தூக்கில் தொங்கியபடியும் உயிரிழந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அடிக்கடி அம்பிகா செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் அவரின் நடத்தையின் மீது தனஞ்செழியன் சந்தேகம் கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை பெல்ட்டால் கழுத்தை நெறித்து கொன்ற தனஞ்செழியன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.