முதலாளிக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு.. உயிரை மாய்த்த தொழிலாளி - தூத்துக்குடியில் அதிர்ச்சி
தூத்துக்குடி அருகே உப்பள நிறுவன மேலாளர் கொடுத்த டார்ச்சரே தன் முடிவுக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு உப்பள தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விளாத்திகுளம் அருகே உள்ள பனையூரைச் சேர்ந்தவர் உப்பளத் தொழிலாளி வேல்முருகன். இவர் உப்பளம் அருகே உள்ள ஒரு கட்டடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மரணத்திற்கு முன்பாக அவர் தன்னுடைய முதலாளிக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில் உப்பள மேலாளர் விஜயகுமார் தனக்கு அளவு கடந்த மன உளைச்சல் கொடுத்ததாகவும், தன்னிடம் இருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு தராமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வேல்முருகனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் குற்றச்சாட்டுக்கு ஆளான விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.