முட்புதரில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்.. அதிர்ச்சியில் உறவினர்கள்- பொள்ளாச்சியில் பயங்கரம்
பொள்ளாச்சி அருகே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் நாகவேணி. இவரின் கணவர் ராஜேந்திரன் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், நாகவேணி தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக புதுப்பாளையம் அருகே அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதே போல் மேய்ச்சலுக்காக மாடுகளை அழைத்து சென்ற நாகவேணி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது அருகில் உள்ள முட்புதரில் ரத்த காயங்களுடன் நாகவேணி இறந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீசாரால் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.