கவலையுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு காவலர் அனுப்பிய வீடியோ

Update: 2023-05-21 03:04 GMT

எந்தக் காரணமும் இன்றி சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்ததால் தற்கொலை செய்து கொள்ளும் அளவு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக முதல்வர் ஸ்டாலினுக்கு நெல்லை காவலர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சிதபரப்பநல்லூர் காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலராகப் பணியாற்றும் செல்லதுரை உடல் நலக் குறைவால் மருத்துவ விடுப்பில் இருக்கும் நிலையில், தான் எவ்விதக் காரணமும் இன்றி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொந்த மாவட்டத்திலேயே பணியமர்த்த வேண்டும் என்றும் கவலையுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்