கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தண்டோரா போடும் வீடியோ

Update: 2022-08-09 07:05 GMT

கடந்த வாரம் 2 லட்சத்து 50,000 கன அடி நீர் வந்த நிலையில், படிப்படியாக நீர்வரத்து சற்று குறைந்தது.

கடந்த மூன்று நாட்களாக 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில்,தற்போது திடீரென நீர்வரத்து உயரத் தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு 1 லட்சம் கனஅடியில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால், தொடர்ந்து நீர்வரத்து உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஒகேனக்கல் காவேரி கரையோர பகுதி பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 நாட்களாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்