உயிருக்கு போராடிய சிசு... ஆம்புலன்ஸில் ஒலிக்காத சைரன்... 50கிமீ தூரம் விடாமல் ஹாரனை அழுத்திய ஓட்டுநர்... அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம்
- திருப்பூரில், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் சைரன் பழுதடைந்ததால், பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உயர் சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
- இதையடுத்து, பச்சிளம் குழந்தையை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- ஆனால், சுமார் 3 மணி நேரம் தாமதமாக ஆன்புலன்ஸ் வந்துள்ளது. தொடர்ந்து குழந்தையை அழைத்துக்கொண்டு கோவை புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் சைரன் ஒலிக்காததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- சைரன் இல்லாததால், அந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துள்ளது.
- இதுகுறித்து, அவசர கட்டுப்பாட்டு அறையின் உதவியை பெற்றோர் தொலைபேசி மூலம் நாடிய போதும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக தெரிகிறது.
- இது ஒருபுறம் இருக்க, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹாரனை(Horn) அழுத்தியவாறு 50 கிலோ மீட்டர் தூரம் வண்டியை ஓட்டி, கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார்.
- அரசு பணியாளர்களின் அலட்சியத்தால், உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தைக்கு பல மணி நேரம் தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.