வேகமாக வந்து சொருகிய கார்.. வெடித்து சிதறிய மின் கம்பம் - இருளில் மூழ்கிய கிராமம்

Update: 2023-05-17 01:57 GMT

கோவையில், மின் கம்பம் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய மதுப்பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. இருகூர் சாலையில் அதிவேகமாக வந்த கார், மின் கம்பம் மீது மோதியதில், டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துக்குள்ளானது. உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர், மதுபோதையில் காரை இயக்கிய நபரை மீட்டு, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்