மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எலிசபெத் ராணியின் வாரிசுகளான மன்னர் சார்லஸ், இளவரசி ஏனி, இளவரசர்கள் ஆண்ட்ரூ மற்றும் எட்வர்டு ஆகியோர் ராணியின் உடலுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். நால்வரும் பாரம்பரிய முறைப்படி ராணுவ உடையணிந்து, ராணி எலிசபெத்தின் உடலை சுற்றி தலைகுனிந்தபடி நின்று, பதினைந்து நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.