வெடித்தது கலவரம்.. 40 பேர் சுட்டுக்கொலை - மணிப்பூர் விரைகிறார் அமித் ஷா

Update: 2023-05-29 08:34 GMT

பதற்றமான சூழல் நிலவும் மணிப்பூர் மாநிலத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 4 நாட்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினரின் பழங்குடியின அந்தஸ்து கோரிக்கை தொடர்பாக, இம்மாத தொடக்கத்தில் பயங்கர கலவரம் வெடித்தது. அதனைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் அடிக்கடி வன்முறை நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங், தற்போது மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேதான் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும், சமூகங்களுக்கு இடையே மோதல் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 40 பேர் கலவரக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் நேற்று அவர் கூறினார். இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை மணிப்பூர் செல்லவுள்ளார். ஜூன் ஒன்றாம் தேதி வரை அம்மாநிலத்தில் பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா, அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். மேலும் அம்மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்