தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வருவாய் மேற்பார்வையாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளர் சசிகுமார் மின் கட்டண வசூல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர், சசிகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.