கறி விருந்துக்கு சென்ற கூலித்தொழிலாளி...காவிரி ஆற்றில் கிடந்த உடல் - அதிர்ச்சி சம்பவம்
- திருச்சி அருகே கறி விருந்துக்கு சென்ற கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..
- திருச்சி மாவட்டம், முசிறி மலையப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர்.
- இவர்கள் குடும்பத்தோடு கரூரில் வசித்து வந்த நிலையில், செல்வராஜ் முசிறி அருகே கொக்கு வெட்டியான் கோயிலில் கறி விருந்துக்கு சென்றுள்ளார்.
- அங்கு, காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் தலையில் பலத்த காயங்களுடன் செல்வராஜ் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அவரின் சடலத்தை மீட்ட போலீசார், கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.