கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த மாயநாயகனப்பள்ளி கிராமத்தில், மாதேஷ் என்ற கூலித் தொழிலாளி, மது போதையில் குட்டையில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து கொண்டு வந்து விற்கப்படும் தடை செய்யப்பட்ட மதுபானங்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.