ஆக்ரோஷமாக சத்தமிட்டபடியே சாலையை கடந்த யானைகள் கூட்டம் - சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ

Update: 2023-05-05 16:38 GMT

தமிழக - கேரளா எல்லை மலைப்பாதையில் இரு யானைகள் ஆக்ரோஷமாக சத்தமிட்டபடி, சாலையை கடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் ப ரவி வருகிறது. கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய சாலையில் கீழ்நாடு காணி பகுதியில் இரு யானைகள் சாலையை கடக்க முயற்சி செய்தது. ஆனால் வாகனங்கள் நீண்ட நேரமாக சென்று கொண்டிருந்ததால், கோபம் அடைந்த யானைகள், ஆக்ரோஷமாக கத்தின.

பின்னர் ஓட்டுநர்கள் யானைகள் வருவதை அறிந்து வேகமாக வாகனங்களை இயக்கிய பின், அவை கடந்து சென்றன. இதன் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்