மகளின் திருமண வரவேற்பு நாளில் கொடூரமாக சிதைக்கப்பட்ட தந்தை...இரவு 12 மணிக்கு எமனாக வந்த காதலன்

Update: 2023-06-30 16:59 GMT

தான் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு செய்து வந்த பெண்ணின் தந்தையை, இளைஞர் வீடு புகுந்து மண்வெட்டியால் அடித்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கேரள மாநிலம் திருவனந்தபுரம், வர்கலா பகுதியை சேர்ந்தவர் ராஜூ. 61 வயது முதியவரான இவர், வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் திரும்பி அங்கேயே செட்டிலாகியிருக்கிறார்...

ஆட்டோ ஒட்டி குடும்பத்தை கவனித்து வந்த ராஜூ, தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார்...

கிட்டத்தட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து மகளின் திருமண தேதியையும் குறித்த அவர், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வர்குலா அருகில் உள்ள சிவகிரியில் வைத்திருந்த நிலையில், குடும்ப உறவினர்கள் பலர் வந்து கலந்துகொண்டுள்ளனர்...

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து உறவினர்களெல்லாம் சென்ற நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்னு என்ற இளைஞர், ராஜுயின் வீட்டினுள் நுழைந்து தகராறு செய்துள்ளார்...

அவருடன் சேர்ந்து அவரது சகோதரர் மற்றும் நண்பர்களும் தகராறு செய்த நிலையில், முதியவர் ராஜூவை ஜிஷ்னு மண்வெட்டியால் வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இளைஞர் ஜிஷ்னு மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்...

மகளின் திருமண வரவேற்பு நாளில் கொடூரமாக சிதைக்கப்பட்ட தந்தை...இரவு 12 மணிக்கு எமனாக வந்த காதலன்விசாரணையில், இளைஞர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞர் ஜிஷ்னுவுக்கும், ராஜுயின் மகளுக்கும் பழக்கமாகி காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது...

இருவரின் காதலும் இரு வீட்டார்க்கும் தெரியவர, அவர்களும் காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்...

அதற்கான வேலைகள் ஆரம்பமான நிலையில், திடீரென இளைஞர் ஜிஷ்னுவிற்க்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த ராஜூ, திருமண வேலைகளை அடியோடு நிறுத்தி அதில் இருந்து பின்வாங்கி யிருக்கிறார்...

இதனால், ஆத்திரத்தில் இருந்த ஜிஷ்னு, காதலித்து வந்த பெண்ணுக்கு அவருடைய தந்தை வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க இருந்த ஆதங்கத்தில் அவரை வெட்டிக்கொன்றது தெரியவந்துள்ளது...

இந்நிலையில், ஜிஷ்ணு அவரது சகோதரர் ஜிஜின், நண்பர்கள் ஷியாம்குமார் மற்றும் மனு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்...

மறுநாள் திருமணம் என்கிற நிலையில் இருந்த வீட்டை இழவு வீடாக மாற்றிய இளைஞர்கள்... பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி அவரது தந்தையை கொன்று திருமணத்தை நிறுத்தியது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்