அமேசான் நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு
தினத்தை முன்னிட்டு கிப்ட் கார்டு அனுப்பப்பட்டுள்ளதாக கூறி வரும் தகவலை நம்ப வேண்டாம் என, சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த கிப்ட் கார்டில் கிராச் செய்யும் போது இருக்கும் code, உடனடியாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஹெல்ப்லைனுக்கு, கால் செய்து தெரிவிக்குமாறு மோசடி கும்பல் வலை விரிக்கும் என, காவல்துறை கூறியுள்ளது. அவ்வாறு தெரிவிக்கும்போது விலை உயர்ந்த பரிசுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி, ஜி.எஸ்.டி வரிகளை செலுத்த வேண்டும் எனவும், பல்வேறு சேவை வரிகளை செலுத்த வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் செயலில் மோசடி கும்பல் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறாக கடிதம் மூலமாகவோ, ஈமெயில், whatsapp அழைப்புகள் குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் மூலமாக வரும் அமேசான் கிப்ட் கார்டுகளை நம்பி ஏமாற வேண்டாம் என, சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.