LGBT சமூகத்தினரின் வண்ணமயமான "Pride" பேரணி... பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் LGBT சமூகத்தினர் மாபெரும் ப்ரைட் பேரணி நடத்தினர். பொகோடா வீதிகளில் வானவில் கொடிகளுடன், தங்கள் செல்லப் பிராணிகளையும் அழைத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். 2016ம் ஆண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அந்நாட்டு நீதிமன்றம் சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது. மேலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும் அந்நாட்டில் அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.