5 வயது சிறுமிக்கு பக்கத்துக்கு வீட்டு சிறுவன் செய்த பகீர் செயல் - பரபரப்பு சம்பவம்

Update: 2022-08-21 06:07 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே பாட்டையூரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் இருப்பதை அறிந்து, மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமி அளித்த தகவலின்பேரில், பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவனை அணைக்கட்டு போலீசார் கைது வேலூர் சிறையில் அடைத்தனர். 5 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்