ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை..."20 அடியில் இருந்து இப்ப 50 அடி.." - களம் இறங்கிய ராணுவம்
மத்திய பிரதேசத்தில், 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி, 24 மணி நேரத்தை கடந்து தொடருவதால், ராணுவம் களம் இறங்கி உள்ளது.செஹோர் மாவட்டத்தில் உள்ள முகவலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தனது வீட்டின் அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது அருகே இருந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை தொடங்கினர். ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. மீட்பு பணி நடைபெற்ற 24 மணி நேரம் முடிந்த நிலையில், 20 அடியில் இருந்து குழந்தை 50 அடி வரை சென்று விட்டதாக கூறப்பட்டுள்ளது.தேசிய மாநில பேரிடர் மீட்பு குழு உடன் இராணுவமும் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் செஹோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பவர், தொடர்ந்து மீட்புப் படையினர், குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.