10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிறைக் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு.. சிறைச்சாலையில் பகீர் சம்பவம்

Update: 2023-05-06 10:25 GMT

சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர், சிறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆலந்தூர், லஸ்கர் தெருவை சேர்ந்தவர் ரகு. இவர் கடந்த 1 ஆம் தேதி 10 வயது சிறுமியிடன் அத்துமீறியதாக கூறி போக்சோ வழக்கின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், இரவு உணவு நேரத்தின் போது கழிவறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரகுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்