எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கையின் காரைநகர் பகுதியில் எல்லை தாண்டி, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக கூறி, ஒரு படகையும் அதில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேஷன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற பின், நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என தெரிய வருகிறது.
இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.