7,500 கிலோ அரிசி, 6 டன் காய்கறிகளுடன் ஒரு லட்சம் பேருக்கு தயாராகும் விருந்து - மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா

Update: 2023-05-02 01:41 GMT

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா, கடந்த 23-ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் பல்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். சித்திரைப் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை, மேல - வடக்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபதில் நடைபெற உள்ளது. இதற்காக, மணமேடையில் மலர் அலங்காரம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், திருக்கல்யாணத்தை ஒட்டி, ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 7 ஆயிரத்து 500 கிலோ அரிசி, 6 டன் காய்கறிகளுடன் உணவு தயாரிக்கப்படுகிறது. சமையல் பணியில் 400-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்