34 நிமிடத்தில் 68 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (21.05.2023)

Update: 2023-05-21 04:58 GMT

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2024-ம் ஆண்டு குவாட் நாடுகளின் மாநாடு இந்தியாவின் தலைமையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். உலகளாவிய வர்த்தகம் புதுமை வளர்ச்சி போன்றவற்றின் என்ஜினாக குவாட் நாடுகள் உள்ளது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டார். இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் அந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை விட, டாஸ்மாக்கில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கிக் கொள்ளப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தான் உலகில் பெரிய அறிவிப்பாக தோன்றுகிறது என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல முயற்சியாக தான் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்..

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் நள்ளிரவில் திடீரென சோதனை மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், கனரக வாகனங்கள் செல்வதைப் பார்த்து பணியில் இருந்த காவலர்களை கண்டித்தார். களியக்காவிளை சோதனை சாவடியை கடந்து 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்றதை கண்ட அமைச்சர், பணியில் இருந்த காவலர்களை லெஃப்ட் ரைட் வாங்கினார். மேலும், தொலைத்து கட்டிவிடுவேன் என்று எச்சரிக்கையும் விடுத்தார். இதனிடையே, அமைச்சரின் ஆய்வு குறித்த தகவல் பரவியதால், பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, காலையில் சாரை சாரையாக சென்றன.

கர்நாடகா தேர்தலில் பாஜகவின் தோல்வியை மறைக்கவே, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்