அடேங்கப்பா!… 655 அறைகள்! 28 ஏக்கர்... தெலுங்கானா புதிய தலைமைச் செயலகம் திறப்பு

Update: 2023-05-01 10:55 GMT

தெலுங்கானா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகத்தை, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்துவைத்தார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 28 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த தலைமை செயலகத்துக்கு டாக்டர் அம்பேத்கர் தலைமை செயலகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளுக்கு 8 ஆயிரம் டன் இரும்பு, 60 ஆயிரம் கன மீட்டர் சிமெண்ட் மற்றும் 11 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

புதிய தலைமைச் செயலகத்தில் மொத்தம் 655 அறைகள் மற்றும் 30 மாநாட்டு அரங்குகள் கட்டப்பட்டுள்ளன. திறப்பு விழாவை முன்னிட்டு சுதர்சன யாகம், சண்டியாகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

புதிய தலைமை செயலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தனது அறையில் அமர்ந்து, முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்