29 நிமிடத்தில் 63 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (23.05.2023)

Update: 2023-05-23 04:34 GMT

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதலமைச்சர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலும், அடுத்த ஆறு நாட்கள் ஜப்பானிலும் முதல்வர் இருப்பார். சிங்கப்பூரில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஜப்பான் தொழில்துறை அமைச்சரை சந்திக்க உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகா மற்றும் டோக்கியோ நகரங்களில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்

2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் நடைமுறை இன்று முதல் தொடங்குகிறது. இன்னும் 4 மாத கால அவகாசம் இருப்பதால், பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நாட்களில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளுமாறும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பின்னர், காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணி இட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் தொடருவார் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் தொடருவார் என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரையும் பணி இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யயப்படுவதாக இறையன்பு தெரிவித்துள்ளார். நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், சுகாதார செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டிற்குள் ராஜஸ்தானின் சாலைகள், அமெரிக்க சாலைகள் போல் மாறும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம், அனுமன்கர் மாவட்டத்தில் சேது பந்தன் திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீடிற்கான திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்