காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-01-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-01-31 00:55 GMT

குடியரசு தலைவர் உரையுடன், இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்...

மதுரை, தேனி நிர்வாகிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை...

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து விரைவில் ராமதாஸ் அறிவிப்பார்...

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்க மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கம்...

இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் தேவை இல்லை... அழுத்தம் காரணமாக யு-டர்ன் அடித்துள்ளார்... பீகாரில் தேச ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தி எம்.பி. விமர்சனம்...

இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு சார்பில், மத்திய அரசை கண்டித்து நாளை சென்னையில் பிரமாண்ட பேரணி... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்...

மோடி என்ற தலைவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு... அவரை இழப்பதற்கு தயாராக இருக்கிறோமா என்றும் கேள்வி...

Tags:    

மேலும் செய்திகள்