காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-06-2023)

Update: 2023-06-09 00:51 GMT

தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டியில், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பங்கேற்கும் நிலையில், தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போன அவலம்...விளையாட்டில் சாதனை படைப்பதற்காக காத்திருந்த தமிழக பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்...

ஆவினில் சிறுவர்களை பணியமர்த்திய அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.....

அம்பத்தூர் ஆவினில் சிறுவர்கள் பணியாற்றியதற்கான ஆதாரம் உள்ளதாக ஒப்பந்த ஊழியர் பரபரப்பு பேட்டி....ஆவினில் சிறுவர்கள் யாரும் பணியில் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் மறுத்த நிலையில், புதிய தகவல்....

நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் ஆலோசனை கூட்டம்...கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் வருகிற 11ஆம் தேதி, டெல்லியில் நடைபெறுகிறது...

ராகுல்காந்தி வெற்றி பெற்ற கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படும் என தகவல்...காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு...

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற கட்சித் தலைமை முடிவு என தகவல்...நாடாளுமன்ற தேர்தலையொட்டி டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்க மாநில தலைவர்களும் மாற்றப்படுகின்றனர்...

மின் கட்டண உயர்வு தாங்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்....தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து...

வணிக நிறுவனங்களுக்கு மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 21 காசுகள் வரை அதிகரிப்பு...வீடுகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு...

நடப்பாண்டு குறுவை பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும்...கூடுதலாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு...

மேட்டூர் அணை வருகிற 12ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு...

Tags:    

மேலும் செய்திகள்