27 நிமிடத்தில் 57 செய்திகள்.. | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News |Thanthi Short News (16.05.2023)
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த கள்ள சாராய விற்பனையை தடுக்க தவறியதாக காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பிரதீப், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் தங்களுக்கு தெரியப்படுத்தாமல் உறவினர்களின் உடல்களை புதைத்துவிட்டதாக இருளர் சமூகத்தினர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மகள் புகார் மனு அளித்தனர். இறப்பில் மர்மம் உள்ளதால் உடலை தோண்டி எடுத்து மறு உடல் கூராய்வு மேற்கொள்ள வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக எழுந்த மோசடி புகாரில், அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான சம்மன் ரத்துக்கு எதிரான, அமலாக்கத் துறை மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இது தொடர்பாக சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அமலாக்கத் துறை சார்பில் ஏற்கனவே வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 2-ஆம் தேதி தள்ளி வைத்தது. இந்நிலையில், இந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது...
பாரம்பரிய படுகர் இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார் அமைச்சர்...