திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்த 50 பெண்கள்

Update: 2022-08-03 07:29 GMT

அணக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் "காண்டிக்ஸ்" என்ற பெயரிலான ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அருகில், மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் உள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று மாலை வெளியான விஷவாயு, அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால், மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் விஷவாயுவை சுவாசித்து மயக்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உயர் மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்