பிரியாணிக்கு பெயர்போன பிரபல ஹோட்டலில் அண்டாவுக்குள் அள்ள அள்ள வந்த கெட்டுப்போன சிக்கன் பீஸ்கள் - சென்னையில் அதிர்ச்சி
சென்னையின் பிரபல உணவகத்தில், கெட்டுப்போன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவகங்களில், இதுபோன்று கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்படுவது அசைவ பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....
சென்னையின் பிரபல உணவகத்தில், கெட்டுப்போன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவகங்களில், இதுபோன்று கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்படுவது அசைவ பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....கேரளாவில் கடந்த மாதம் 2ஆம் தேதி சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில், கெட்டு போன இறைச்சி சிக்குவது, அசைவ பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில், பிரியாணி சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர், உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து அதிரடியாக களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஹோட்டலின் சமையலறைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதில், கெட்டுப்போன இறைச்சியை கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டத்தை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி இடைந்தனர்.கோழிக்கறி மட்டும் இல்லாமல் மீன், இறால் உள்ளிட்ட மாமிச பொருட்களும் கெட்டுப்போய் இருந்தது. மேலும், இறைச்சியை பதப்படுத்தி வைத்திருந்த குளிர்சாதனப் பெட்டியும் சுகாதாரமற்ற முறையில் இருந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள். ஹோட்டலுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.