பெல்ட்டில் மறைத்து வைத்து 5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் - விமான நிலையத்தில் பரபரப்பு

Update: 2022-10-14 15:55 GMT

பெல்ட்டில் மறைத்து வைத்து 5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் - விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் ஆகியவை சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மும்பை சத்திரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் ரகசிய தகவலின் படி, அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து வந்த இந்தியர் பெல்ட்டில் மறைத்து வைத்து கடத்தி வந்த 9.895 கிலோ எடையுள்ள 5 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் துபாய் விமான நிலையத்தில் 2 சூடானியர்களால் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பயணிகளிடம் இருந்து உள்ளாடைகளில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 2 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பிலான 5.101 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான 4 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையிலிருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி-13 இல் செல்லவிருந்த 2 பயணிகளிடம் இருந்து, பிஸ்கட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட 22 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐக்கிய அரபு அமீரக பணமான திர்ஹாம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்